https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/17/large/898933.jpgஃபிஃபா WC | நட்சத்திர விடுதிக்கு பதிலாக கத்தார் பல்கலைக்கழகத்தில் முகாமிட்டுள்ள மெஸ்ஸி and அர்ஜென்டினா அணியினர்

நடப்பு ஃபிஃபா உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் வகையில் கத்தார் நாட்டில் லேண்ட் ஆகியுள்ளது அர்ஜென்டினா அணி. பெரும்பாலும் முக்கிய தொடர்களில் விளையாடும் அணிகள் நட்சத்திர விடுதியை தான் வீரர்கள் தங்க தேர்வு செய்யும். ஆனால், அர்ஜென்டினா அணி கத்தார் பல்கலைக்கழகத்தை தேர்வு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணம் என்னவென்று பார்ப்போம்.

1930, 1978, 1986, 1990 மற்றும் 2014 என 5 முறை உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா விளையாடி உள்ளது. அதில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த முறை அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் மெஸ்ஸிக்கு இது கடைசி உலகக் கோப்பை தொடராக இருக்கும் என தெரிகிறது. அதனால் இந்த முறை கோப்பையை உறுதி செய்வதில் அர்ஜென்டினா உறுதியாக இருக்கும் என்றே தெரிகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post