கோவை: தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வெட்டுக்கிளிக்கு 'திராவிடாக்ரஸ் அண்ணாமலைக்கா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் 28 ஆயிரம் வகையான வெட்டுக்கிளிகள் காணப்படுகின்றன. இதில், இந்தியாவில் இதுவரை 1,708 வகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது மொத்த வகைகளில், சுமார் 9 சதவீதம் ஆகும். இந்நிலையில், கடலூர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பூச்சியியல் துறையில் ஆராய்ச்சி மாணவராக இருந்த சங்கரராமன், கடந்த 2020-ம் ஆண்டு பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக வெட்டுக்கிளி ஒன்றை பார்த்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Tags
Cinema
Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Latest Tamil News India & World
இந்து தமிழ் திசை : News in Tamil