பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிகை என்பதைத் தாண்டி தனது தடாலடியான கருத்துகளால் கவனம் பெற்றவர். கங்கனா ரனாவத் சினிமா மட்டுமின்றி அரசியல் குறித்தும் தனது விமர்சனங்களை முன்வைப்பவர். மத்திய அரசு தொடர்பான பிரச்னைகள், சில அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து பேசுவது வழக்கம். இதுமட்டுமின்றி அவர் தலைவி, எமர்ஜென்சி போன்று அரசியல் தலைவர்களின் கதாபாத்திரத்தில் நடித்து வருவதால் ரனாவத் அரசியலில் களமிறங்குவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். இந்நிலையில் கங்கனா ரனாவத் அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்ற கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா ரனாவத், ``நாட்டுக்கு சேவை செய்பவர்களுக்கு தொடர்ந்து நான் ஆதரவளிப்பேன். எல்லா வகையிலும் அவர்களுக்கு துணை நிற்பேன். “அரசியலில் இணைந்து தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இப்போதைக்கு இல்லை”. ஆனால் ஒரு நடிகையாக எனக்கு இந்திய அரசியலில் ஆர்வம் உண்டு. இனி வரும் காலங்களில் அரசியலை மையமாக வைத்து திரைப்படம் எடுப்பேன் என்று அவர் பேசியிருக்கிறார்.
தற்போது கங்கனா ரனாவத் எமர்ஜென்சி என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். அந்த படத்தில் கங்கனா முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியாக நடிக்கிறார்.
from Latest News