‘‘இது மக்களுக்கான தீபாவளிப் பரிசு’’ - ஆண்டுக்கு 2 இலவச சிலிண்டர் அறிவித்த குஜராத் அரசு https://ift.tt/blJWeqs

காந்திநகர்: பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனாளிகளுக்கு இனி ஆண்டுக்கு 2 இலவச சிலிண்டர் வழங்கப்படும் என்று குஜராத் அரசு அறிவித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இங்கு பாஜக ஆட்சியில் உள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற பஞ்சாப் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி, குஜராத்திலும் ஆட்சியைப் பிடிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் குஜராத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post