https://ift.tt/uf6L70v குழந்தைகளை ஒப்படைக்கும் வழக்குகளில் அதிகாரம் உள்ளதா.!- ஐந்து நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு

பிரிந்த தம்பதியர், குழந்தையை ஒப்படைக்க கோரும் வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற ஐந்து நீதிபதிகள் அமர்வு பெரும்பான்மையாக தீர்ப்பளித்துள்ளது.

குடும்பநல நீதிமன்ற சட்டம் கொண்டு வந்த பின், குழந்தையை ஒப்படைக்க கோரும் வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதாக 1989ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில், குழந்தையை ஒப்படைக்க கோரிய வழக்கில் உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா? 1989ம் ஆண்டு தீர்ப்பு குடும்பநல நீதிமன்ற சட்டத்துக்கு பிறகும் பொருந்துமா என கேள்வி எழுப்பிய தனி நீதிபதி பார்த்திபன், இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்க மூன்று நீதிபதிகள் அமர்வை அமைக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார்.

அதன்படி நீதிபதி பி.என்.பிரகாஷ் தலைமையில் மூன்று நீதிபதிகள் அமர்வு அமைக்கப்பட்ட நிலையில், 1989ம் ஆண்டும் மூன்று நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளதால், வழக்கை ஐந்து நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பதிந்துரைக்கப்பட்டது.

image

ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில், நீதிபதிகள் மகாதேவன், சுந்தர் மற்றும் நக்கீரன் ஆகிய மூன்று நீதிபதிகள் குழந்தைகளை ஒப்படைக்க கோரிய வழக்குகளை உயர் நீதிமன்றம் விசாரிக்க அதிகாரம் உள்ளதாகவும், நீதிபதிகள் பிரகாஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் ஆகிய இரண்டு நீதிபதிகள், உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்றும் தீர்ப்பளித்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post