குக்கு வித் கோமாளி புகழ் – பெல்ஸியா திருமணம் செப்டம்பர் முதல் தேதி புகழின் பெற்றோர் முன்னிலையில் திண்டிவனம் அருகே உள்ள தீவனூர் - பொய்யாமொழி விநாயகர் ஆலயத்தில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது.
சினிமா மற்றும் சின்னத்திரை நண்பரகளுக்காக திருமண வரவேற்பானது மகாபலிபுரத்தில் வரும் 5ம் தேதி நடக்க இருக்கிறது. இந்நிலையில் ஓராண்டுக்கு முன்பே இந்த ஜோடியின் திருமணம் கோயம்புத்தூரில் சுயமரியாதைத் திருமணமாக நடைபெற்றதாக சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன..
(விகடன் தளத்திலும் கடந்தாண்டு ஜூன் மாதமே ‘ரகசியத் திருமணம் செய்து கொண்டாரா புகழ்’ என்கிற தலைப்பில் கட்டுரை வெளியாகி இருந்தது நினைவிருக்கலாம்.)
இந்தச் செய்தியை வைத்து, ’ஒருபுறம் சுயமரியாதைத் திருமணம், இன்னொரு பக்கம் கோயிலில் திருமணமா’ என சிலர் விமர்சிக்கவும் தொடங்கினர்.
தன்னை இப்படிக் கலாய்த்தவர்களுக்கு தற்போது தெளிவான பதிலைத் தந்திருக்கிறார் புகழ்.
என் தந்தையின் அன்பிற்காக ஒரு முறை
தாய் அன்பிற்காக ஒருமுறை
என் மனைவி குடும்பத்தார் அன்பிற்கு ஒரு முறை (பென்சியா இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்)
என் மீது அன்பு செலுத்தும் வேறு எந்த அன்பு உள்ளங்களாவது ஆசைப்பட்டால் அவர்களூக்காக இன்னொரு முறையும் தயார் என ஸ்டேட்டஸ் வைத்து தன் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி இருக்கிறார்.
from Latest News