https://ift.tt/G78uUgp டிஆர்பியில் தமிழ் தகுதித்தேர்வு அறிமுகம்

பிற மாநிலத்தவர்கள் தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தக்கூடிய பல்வேறு தேர்வுகளில் நுழைவதை தடுக்கும் வகையில், தமிழ் தகுதித்தேர்வு நடைமுறையை டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், முதன்முறையாக தமிழ் தகுதித் தேர்வாக அறிமுகப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. அரசுப் பணியாளர் தேர்வாணையம் கொண்டு வந்த தமிழ் தகுதித் தேர்வு நடைமுறையைப் பின்பற்றி ஆசிரியர் தேர்வு வாரியம் இதனை அறிவித்துள்ளது. இதன்மூலம் தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

30 கேள்விகள், 50 மதிப்பெண்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 20 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெறவேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பிராதான விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் மாநில கல்வியியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் விரிவுரையாளர், இளநிலை விரிவுரையாளர், பேராசிரியர் ஆகிய 155 பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.

image

இதில், தமிழ் தகுதித் தேர்வில் தேர்சி பெறுவது கட்டாயம் என்கிற முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் தமிழ் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்கிற விதிமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post