இந்தியாவைப் பற்றி தவறான தகவல்களை பரப்பிய 8 யூடியூப் சேனல்களுக்கு தடை: மத்திய அரசு நடவடிக்கை https://ift.tt/vHZn0kF

புதுடெல்லி: இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவு தொடர்புகள், பொதுஒழுங்கை சீர்குலைக்கும் தவறான தகவல்களை பரப்பிய 8 யூடியூப் சேனல்களை தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தடை செய்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம், 2021 தகவல் தொடர்பு சட்டத்தைப் பயன்படுத்தி, 8 யூடியூப் செய்தி சேனல்கள், 1 முகநூல் கணக்கு, 2 முகநூல் பதிவுகளை தடை செய்வதற்கான உத்தரவுகளை செவ்வாய்க்கிழமை (ஆக.16) அன்று பிறப்பித்தது. தடை செய்யப்பட்ட யூடியூப் சேனல்கள் மொத்தமாக, 114 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களையும், 85 லட்சம் சந்தாதாரர்களையும் கொண்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post