https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/30/large/833161.jpgகாயத்தில் மீண்ட தீபக் சாஹர், மீண்டும் கேப்டனாக ஷிகர் தவண் - ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி விவரம்

மும்பை: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வேயில் இந்தியா சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. ஆகஸ்ட் 18, ஆகஸ்ட் 20 மற்றும் ஆகஸ்ட் 22 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள போட்டிகள் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடக்கவுள்ளது. இதற்காக பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற முன்னணி வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, யுஸ்வேந்திர சாஹல் போன்ற முன்னணி வீரர்கள் அனைவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை தொடர், டி20 உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post