கடன் தொல்லையால் உயிரிழந்த பெண் - தற்கொலைக்கு தூண்டியதாக மற்றொரு பெண் கைது

ஆவடியில் கடன் தொல்லையால் விஷம் குடித்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். தற்கொலைக்கு தூண்டியதாக பக்கத்து வீட்டுப்பெண் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்

ஆவடி அருகே திருநின்றவூர் ராமர் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவரது மனைவி பவானி(34). பவானி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப செலவிற்கு பணம் தேவைப்பட்டதால் அதே பகுதியில் வசிக்கும் விஜயலட்சுமி என்பவரிடம் இரண்டு லட்சம் ரூபாய் வட்டிக்கு கடனாக வாங்கி உள்ளார். ஆனால் வாங்கியக் கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் விஜயலட்சுமி அடிக்கடி பவானி வீட்டுக்கு வந்து தகாத வார்த்தைகளில் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த பவானி கடந்த 14ஆம் தேதி பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு வீட்டில் மயங்கி விழுந்தார்.

image

உடனே அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்று சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பவானி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பவானியின் கணவர் ஜெயபிரகாஷ், என் மனைவி தற்கொலை செய்து கொண்டதற்கு விஜயலஷ்மி தான் காரணம் என திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  புகாரின் அடிப்படையில் போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து, விஜயலட்சுமியை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post